தாமிரபரணி பட நடிகை பானு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

நடிகை பானு
மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை பானு, விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதையடுத்து இவர் தமிழில் சில படங்களில் நடித்தார், அந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. கடைசியாக பானு, தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்தார்.

புகைப்படம்
பானு கடந்த 2015 ம் ஆண்டு ரிங்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கியாரா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் நடிகை பானு தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.