லெஜண்ட் சரவணன் இத்தனை கோடிக்கு சொந்தகாரரா?

லெஜண்ட் சரவணன்
தொழிலதிபர் சரவணன் கடந்த ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டு இருந்தார்.

இப்படத்தை ஜெடி – ஜெரி இயக்கியிருந்தார். ஊர்வசி ரவுடேலா, விவேக், யோகி பாபு, விஜயகுமார், சுமன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சமீபத்தில் கூறியுள்ளார். அதற்கான பணிகள் தான் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படத்தை இயக்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணனின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 6000 கோடி இருக்குமாம்.

ஒரு நாளைக்கு மட்டுமே தனது தொழில் மூலம் ரூ. 1.5 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம் லெஜண்ட் சரவணன்.

மேலும் Rolls Royce G host ரூ. 8 கோடி, Ferrari 488 GTB- ரூ. 3.68 கோடி, Rolls Royce Wraith- ரூ. 5 கோடி, Lamborghini Huracan- ரூ. 3.73 கோடி, Rolls Royce Phantom- ரூ. 10 கோடி உள்ளிட்ட இனி பல கோடி மதிப்பிலான பல கார்களை சொந்தமாக வைத்துள்ளாராம்.