ஆதி குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் எவ்வளவு பெரிய வலியமான ரோல் என்பதை தமிழக ரசிகர்கள் அறிவார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்து தான்.
ஆம், இயக்குனரின் சொல்லையும் தாண்டி தன்னுடைய உடல் மொழியாலும், ஏம்மா ஏய் போன்ற வசனங்களிலாலும் ஆதி குணசேகரனாக வாழ்ந்தவர் மாரிமுத்து.
இவருடைய இறப்புக்கு பின் யார் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தது. முதலில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.
இனி இவர் ஆட்டம் தான்
அதன்பின், மற்ற சில நடிகர்களின் பெயர் கூட அடிபட்டது. ஆனால், தற்போது உறுதியாக வெளிவந்துள்ள தகவலின்படி, இனி ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி தான் நடிக்கவுள்ளாராம்.
பொறுத்திருந்து பார்ப்போம் புதிய ஆதி குணசேகரனின் என்ட்ரி எப்படி இருக்க போகிறது என்று.