விவாகரத்தால் நொறுங்கி போன இமான்

டி.இமான்
திரைப்பட இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்து வருபவர் டி இமான். இவர் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு 2008 -ம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடந்தது. முதல் திருமணத்தில், எனக்கு இரு குழந்தைகள் உள்ளன. என்னுடைய உயிர் உள்ள வரை அவர்கள் மீது உள்ள பாசம், கொஞ்சம் கூட குறையப்போவதில்லை.

அந்த மணமுறிவுக்குப் பின்னர் நான் பெரிய மன அழுத்ததிற்குள் சென்றேன். என்னால் வேலையே செய்ய முடியவில்லை. நான் அப்படி இருந்ததே கிடையாது. என்னுடைய வாழ்கையில் இசையும், ஆன்மிகமும் இல்லாமல் போயிருந்தால், இந்த நேரம் இமானின் இரங்கல் செய்தி உங்களை வந்தடைந்து இருக்கும்.

விவாகரத்து
குழந்தைகள் திடீரென்று ஒரு நாள், இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நொறுங்கி விட்டேன். அந்த வலியை, வேதனையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கடந்த 3 வருடங்களாக அவர்களது வாயில் இருந்து அப்பா என்ற வார்த்தையை கேட்கவேயில்லை.

ஆனால், அமலியின் குழந்தை என்னை அப்பா… அப்பா.. என்று கூப்பிட்டு தினமும் 1000 முறை எனக்கு பதக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். யாருமே, விரும்பிச் சென்று விவாகரத்தை பெறப்போவதில்லை. அந்த சூழ்நிலையில் இருந்து, அந்த ஆணி மீது உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும்

நான் என்னை நினைத்து பெருமை படுகிற விஷயம்.. நான் புகைப்பிடித்தது கிடையாது. மது அருந்தியது கிடையாது. எந்த பெண்ணின் பின்னாலும் சென்றது கிடையாது. என்னிடம் பெண்ணுடன் உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.