நடிகை சமந்தா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம்.
இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை.
ஹாலிவுட்டில் Richard Madden மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் Citadel. இந்த வெப் சீரிஸின் பிரிமியர் நேற்று மாலை லண்டனில் திரையிடப்பட்டது.
கிளாமர் லுக்
இதற்காக நடிகை சமந்தா சென்றிருந்தார். கிளாமர் உடையில் வருகை தந்திருந்த நடிகை சமந்தா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..