விபரீத முடிவால் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை!

புத்தளம் கடையாக்குளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று (19) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் துயரத்தை ஏறடுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு
தற்கொலை செய்த நபர் 38 வயதுடைய நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவரெனவும் புத்தளம் கடையாக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகவே கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு புத்தளம் கற்பிட்டி வலய திடீர் மரண விசாரணை அதிகாரி வருகை தந்து சடத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.