இரண்டாக உடைந்த பாண்டியன் ஸ்ரோர் குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து வருகிறது.

கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் கூட தனது அண்ணன் மூர்த்தி கல்லா பேட்டியை பூட்டி வைத்துவிட்டதால் ஜீவா தனது அண்ணன் மூர்த்தி மீது கடும் கோபத்தில் பேசினார்.

இதனால் மூர்த்தி அதிர்ச்சியில் உறைந்துபோனார். இதன்பின் தற்போது மீனா வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனைவரும் சென்றுள்ளனர்.

இதில் அனைவரும் குடும்பமாக மொய் வைக்காமல், தனி தனியாக மொய் வைத்துள்ளனர். இதில் ஜீவாவின் பெயர் விட்டுப்போய்விட்டது.

இரண்டாக உடைந்த குடும்பம்
இதனால் ஜீவா தன்னை அனைவரும் மறந்துவிட்டார்கள் என்று கோபத்துடன் அண்ணன் மூர்த்தியிடம் பேசுகிறார்.

‘இனி நான் உங்க தம்பி இல்லை, என்ன மறந்துவிட்டார்கள் அல்லவா இனி நான் உங்க வீட்டிற்கு வரமாட்டேன்’ என்று கூறுகிறார்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாக உடையப்போகிறது என கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.