ரகுவரன் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட முன்னாள் மனைவி ரோகிணி

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்தவர்.

அவர் மார்ச் 19, 2008ல் மறைந்த நிலையில் இன்று அவரது 15வது நினைவு தினத்தன்று பலரும் அவரை நினைவுகூர்ந்திருக்கின்றனர்.

ரோகிணியின் ட்வீட்
நடிகர் ரகுவரனின் முன்னாள் மனைவி ரோகிணி இன்று ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

“மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாக தான் தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் அனைத்தையும் மாற்றி விட்டது.”

“அவர் தற்போது இருந்திருந்தால் சினிமாவின் இந்த காலகட்டத்தை நேசித்து இருப்பார். ஒரு நடிகராகவும் அவர் அதிகம் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என ரோகிணி பதிவிட்டு இருக்கிறார்.