விஜய்யின் முதல் ப்ளாக் பஸ்டர்.. பூவே உனக்காக படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் தற்போது பல சூப்பர்ஹிட் படங்கள் வந்தாலும், விஜய்யின் முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் என்றால் அது பூவே உனக்காக படம் தான்.

விஜய் வாங்கிய சம்பளம்
ஆம், பல விமர்சனங்களை தாண்டி தன்னுடைய திரை வாழ்க்கையில் விஜய் கொடுத்து முதல் ப்ளாக் பஸ்டர் பூவே உனக்காக.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரூ. 5 லட்சம் மட்டுமே இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.