நடிகர் அசோக் செல்வனின் திருமணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி

அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என நல்லநல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணம் என நேற்று தகவல் வெளிவந்தது. திரையுலகை சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளருமானவரின் மகளுக்கும் நடிகையுமான ஒருவருக்கும், அசோக் செல்வனுக்கும் தான் திருமணம் என்று கூறப்பட்டது.

பெண்ணின் பெயர்
சமீபத்தில் இரு வீட்டார் நேரில் சந்தித்து, மாப்பிள்ளையும் பொண்ணும் மோதிரம் மாற்றிக்கொண்டார்களாம். ஆனால், இதுவரை அசோக் செல்வன் திருமணம் செய்துகொள்ள போகும் நடிகை யார் என தெரியவில்லை.

இந்நிலையில், அந்த நடிகையின் பெயர் ‘K’ எழுத்தில் துவங்கும் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.