நயன் விக்கி திருமண வீடியோ ஏன் வெளியாகவில்லை தெரியுமா?

நயன் – விக்கி திருமணம்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பெரிய அளவில் பிரமாண்டமாக நடந்த திருமண விழாவில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. அதன் ப்ரோமோவும் சென்ற வருடமே வெளியானது. ஆனால் முழு வீடியோ தற்போது வரை ரிலீஸ் ஆகவில்லை.

இது தான் காரணம்?
தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி விக்னேஷ் சிவன் தான் அந்த திருமண டாக்குமெண்டரியை இயக்கி வருகிறாராம். அதன் ஷூட்டிங் முடியாத காரணத்தினால் தான் வீடியோவை நெட்பிலிக்ஸ் வெளியிட தாமதம் ஆகி வருகிறது.

இந்த வருடம் ஜனவரி 23ம் தேதி வரை ஷூட்டிங் நடந்திருக்கிறது, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைய இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் விக்கி – நயன் திருமண வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க விக்னேஷ் சிவன் அடுத்து இயக்க இருந்த அஜித்62 படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.