முன்னணி நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா

நாக சைதன்யா
நடிகர் நாக சைதன்யா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன். அவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அவர்கள் என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பது பற்றி வெளிப்படையாக பேசவில்லை. அதனால் பல கிசுகிசுக்களை உலா வர தொடங்கின.

நாக சைதன்யா ஒரு பிரபல நடிகை உடன் தற்போது காதலில் இருக்கிறார் என்று கூட செய்தி பரவியது எல்லோருக்கும் நினைவிருக்கும்.

கமல் மகளுடன் காதல்?
சமந்தாவை காதலித்து திருமணம் செய்யும் முன்பு நாக சைதன்யா நடிகர் கமல் மகளான ஸ்ருதிஹாசனை காதலித்துவந்ததாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சில வருட காதலுக்கு பிறகு சமரசமாக பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ருதி தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.