சிம்புவின் படத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்

கொரோனா குமார்
சிம்பு தற்போது மாநாடு வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மூலமாக தொடர் ஹிட் கொடுத்து இருக்கிறார். அவர் அடுத்து கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட காலமாக தொடங்காமல் இருந்தது. அதனால் சிம்பு கொரோனா குமார் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்று செய்தி பரவியது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

சிம்பு பத்து தல ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் இயக்குனர் கோகுல் கொரோனா குமார் படத்தை ஒதுக்கிவைத்துவிட்டு RJ பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்க சென்றுவிட்டார்.

பிரதீப் ரங்கநாதன்
சமீபத்தில் லவ் டுடே படத்தின் மூலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையையும் திரும்பி பார்க்க வைத்த பிரதீப் ரங்கநாதன் தான் கொரோனா குமார் படத்தில் நடிக்க போகிறார் என தகவல் தற்போது பரவி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேல்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.