பாக்கியலட்சுமி சீரியலில் வனிதா நடிக்கிறாரா? விளக்கமளிக்கும் தயாரிப்பாளர்

வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் அவர் சொந்தமாக பெண்களுக்கான ஒரு துணி கடையையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா வெளியேறுகிறார் என்றும், அவருக்கு பதில் வனிதா விஜயகுமார் தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறார் என்றும் செய்தி பரவி வருகிறது.

உண்மையா?
வனிதா தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறாரா என சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி உடன் கேட்டுவந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.

பரவி வரும் செய்தி துளி கூட உண்மை இல்லை என்றும், ரேஷ்மா தான் தொடர்ந்து ராதிகா ரோலில் நடித்து வருகிறார் என்று தெரிவித்து உள்ளனர்.