விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்கள் வெளிவந்தன.
இதில் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தனது கெட்டப்பை கூட சற்று மாற்றியிருந்தார்.
சமீபத்திய புகைப்படம்
இந்நிலையில், தற்போது தங்கலான் படத்தின் கெட்டப்பில் விக்ரம் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம சியான் விக்ரமா இது! என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..