திருமண திகதியை அறிவித்த கெளதம் கார்த்திக் மஞ்சிமா மோகன்

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் தேதியை தற்போது அறிவித்துள்ளனர்.

நடிகர் கௌதம் மஞ்சிமா ஜோடி
தமிழ் திரையுலகில் கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கௌதம் கார்த்திக். நடிகர் கார்த்திக் மற்றும் அவரது முதல் மனைவி ராகினிக்கும் பிறந்தவர் தான் கௌதம் கார்த்திக்.

கடல் படத்தினை தொடர்ந்து பல படங்களில் பல படங்களில் நடித்த கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா உடன் தேவராட்டம் படத்தில் நடித்தார். பின்பு இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.

தற்போது பெற்றோர்கள் சம்மதத்தின் பேரில், வரும் 28ம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். இதனை தனது காதலியுடன் கௌதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

திருமணம் வரும் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இவர்களின் திருமண பத்திரிகையும் வெளியாகி இருகிறது.

குறித்த திருமண பத்திரிகை முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு இந்த திருமண அழைப்பு அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.