திருமண அறிவிப்பிற்க்கு பின் பிசியான ஹன்சிகா

ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் ரொமாண்டிக்காக எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம்
இந்நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் புன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். தொடர்ந்து இவர்களது திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது. தற்போது, திருமண சடங்குகள் தொடங்கி களைகட்டத் தொடங்கியுள்ளது. இதில், தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியா உடன் நடிகை ஹன்சிகா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.