தனிப்பட்ட தகராறு காரணமாக 41 வயதுடைய பெண்ணை கொன்று தோட்டத்தில் புதைத்த நபர் கைது!

பெண்ணை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்த நபரை காலி – வதுரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 35 வயதான தோட்ட தொழிலாளி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 41 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு
உயிரிழந்த பெண் சந்தேகநபருடன் சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்து வந்தவர் என கூறிய பொலிஸார், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.