யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கடந்த காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நேரத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை பெற்றுத் தருவதாக கூறி, பிரதேசவாசிகளிடமிருந்து பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைவாகவே நேற்று அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.