வாழக்காயில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்

வாழைக்காயில் பலவித மருத்துவநலன்கள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள் என அனைத்துப் பகுதிகளும் மிகவும் பயன்தரக்கூடியவை.

வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகின்ற தொழிற்பாட்டை மேற்கொள்கின்றது எனவே வயிற்றுப் புற்று நோய் ஏற்படாமல் தடுக்க வாழைக்காயை எமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான Vitamin, கல்சியம், மெக்னீசியம் ஆகியன அதிகளவில் நிறைந்துள்ளன.

இதன்காரணமாக எமது உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.’

வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளமையினால் எமது உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. வாழைக்காயில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்திற்கு உதவுகின்றது.

அத்துடன் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் வாழைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்

குறிப்பாக வாழைக்காயானது உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புக்களை கரைத்து உடல் எடையைக் குறைப்பதில் துணைபுரிகின்றது.

வாழைக்காயில் பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. குறித்த பொட்டாசியமானது உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கின்றது.

கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். வாழைக்காயில் Vitamin A அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதைத் தடுக்கின்றது. அத்துடன் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகின்றது.

வாழைக்காயில் பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் எமது உணவில் வாழைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பு மற்றும் உற்சாகம் நிறைந்திருக்கும்.