கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த நபர் இங்கிலாந்தில் கைது!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த 25 பேரில் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

றொரன்டோவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பொலிஸ் சேவையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர்.

39 வயதான உஸ்மான் காசீம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் வைத்து குறித்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கனடாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சட்டவிரோத ஆயுத பயன்பாடு, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கைது தொடர்பில் மான்செஸ்டர் பொலிஸாருடன் கனேடிய அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேக நபரை நாட்டுக்கு கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்த்தப்பட்டு வருகின்றது.

உஸ்மானை கைது செய்வதற்கு உதவுவோருக்கு 50000 டொலர் பணப்பரிசு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.