மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு அனுமதி!

இலங்கையில் மேலும் பல எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு (LIOC) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளதாக LIOC நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.

ஐஓசியின் வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

லங்கா ஐஓசியின் புதிய எரிபொருள் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், லங்கா ஐஓசி பிஎல்சி 2022 ஜூன் 30 இல் முடிவடைந்த காலாண்டில் வருவாய் மற்றும் இலாபங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடியிலிருந்து உருவாகும் செயல்பாட்டு சவால்கள் இருந்தபோதிலும் வலுவான செயல்திறன் பதிவாகியுள்ளது.