எரிபொருள் இன்மையால் பாதிக்கப்படும் கிளிநொச்சி கடல்தொழிலாளர்கள்

கிளிநொச்சி – இரணைமாதா நகர் மற்றும் இரணைதீவு ஆகிய பிரதேசங்களில் எரிபொருளின்மையால் கடல்தொழிலாளர்களின் தொழில் முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச கடல்தொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாளாந்த உணவிற்கே பெரும் கஸ்ரங்களை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமது தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தமக்கான எரிபொருளைப் பெற்றுத் தருவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

எரிபொருளின்மையால் கிளிநொச்சி கடல்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் | Problems Faced Kilinochchi Seafarers Fuel

வாழ்வாதார பிரச்சினைகள்
எரிபொருள் இல்லாத நிலையில் தாங்கள் இரண தீவுக்கு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலும் இரணைதீவில் தங்கியிருக்கும் மக்கள்மீள திரும்ப முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதார பிரச்சினைகள்
எரிபொருள் இல்லாத நிலையில் தாங்கள் இரண தீவுக்கு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலும் இரணைதீவில் தங்கியிருக்கும் மக்கள்மீள திரும்ப முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தங்களுடைய வாழ்வாதார நோக்கிலே முன்னெடுக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை பார்வையிடுவதற்கு அல்லது அட்டைப் பண்ணைகளைச் சென்று பராமரிப்பதற்கு கூட எரிபொருள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.