நடிகை ரோஜா தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபராக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது மகனுக்கு பல கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது.
ரோஜா
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் நகரி தொகுதியின் எம்எல்ஏ-வான நடிகை ரோஜாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் பதவியும், சுற்றுலா துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.
இதனால் ஆந்திர அரசியலில் அசைக்கமுடியாத நபராக ரோஜா உருவெடுத்தார்.
போட்டோ எடுத்து கின்னஸ் சாதனை
இந்நிலையில் ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 போடோபிராபர்கள் போட்டோ கிளிக் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறது.
புகைப்பட கலைஞர்கள் சங்கம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் ரோஜா மேடையில் ஏறி நிற்க அவரை சுற்றி இருந்த போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் போட்டோ கிளிக் செய்தனர்.
தெலுங்கு பேசும் போட்டோக்ராபர்கள் ஒற்றுமையை காட்டுவதற்காக தான் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.