தி லெஜண்ட்
சரவணன் அருள் நடித்து கடந்த ஜூலை 29ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட்.
இப்படத்தை ஜெடி – ஜெரி இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள். இவர்கள் உல்லாசம் மற்றும் விசில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்கள்.
இப்படத்தில் விவேக், ஊர்வஷி ராவ்டெலா, பிரபு, சுமன், விஜயகுமார், ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
வசூல் விவரம்
இப்படம் வெளிவந்த நாளில் இருந்து சற்று கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், வெளிவந்த நான்கு நாட்களின் முடிவில் சுமார் ரூ. 6.5 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது.







