நம்பி நாராயணன் ஆக மாதவன் நடித்து இருக்கும் படம் ராக்கெட்ரி. இஸ்ரோ விஞ்ஞானியான அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் படத்தில் காட்டப்பட்டு இருந்தது.
வசூல்
ஹிந்தியில் இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்து இருந்தது. நான்கு வாரங்களில் ராக்கெட்ரி 23 கோடி ருபாய் ஹிந்தியில் வசூலித்து இருக்கிறது.
இன்னும் தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருப்பதால் மொத்த வசூல் 25 கோடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் வாரம்:Rs 8.95 கோடி
2ம் வாரம்: Rs 6.05 crore
3ம் வாரம்: Rs 4.85 crore
4ம் வாரம்: Rs 3.15 crore
ஹிந்தியில் மொத்தம்: Rs 23.00 கோடி
Lifetime வசூல்
ராக்கெட்ரி படம் ஹிந்தியில் 25 கோடி வசூலித்த நிலையில், தமிழில் சுமார் 10 கோடி வசூலித்ததாக தெரிகிறது.
மேலும் வெளிநாட்டு வசூல் சுமார் 10 கோடி என்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது. அதனால் ராக்கெட்ரி படத்தின் லைப்டைம் வசூல் சுமார் 50 கோடி என கணக்கிடப்பட்டு இருக்கிறது.