சிபி சத்யராஜ் படத்தின் அப்டேட்

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் அருண்மொழி மாணிக்கம் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம்

இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், வட்டம் திரைப்படத்தின் “கண்கொத்திப் பறவையே” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.