ஆணாக மாறிய தமன்னா… வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது தமன்னாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. சேலையில் இருக்கும் தமன்னா அறையில் சென்ற சிறிது நேரத்தில் ஆண்களுக்கான உடையணிந்து ஆணாக மாறி வரும் வீடியோவை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)