உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி..!!

ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, குரோஷியாவிடம் தோல்வி அடைந்தது

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலாவது சுற்றில் 94.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

2-வது தகுதி சுற்றில் டென்மார்க்கை விட சற்று பின்தங்கியது. எனினும் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி டென்மார்க்கை எதிர்கொண்டது.

இதில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு 17-5 என்ற புள்ளி கணக்கில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

ஆண்கள் பிரிவில் ருத்ராங்க்‌ஷ் பட்டீல், பார்த் மஹிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 10-16 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவிடம் தோல்வியை தழுவியது.