2022க்கான ஐபில் இறுதிப் போட்டி எங்கு நடக்க இருக்கிறது தெரியுமா?

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இத்தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், எதிர்ப்பார்த்த சென்னை மற்றும் மும்பை கொல்கத்தா அணிகள் பின் தங்கியுள்ளது.

இந்நிலையில், லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த பிறகு பிளே ஆப் சுற்று போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் வெளியாகமல் இருந்து வந்தது.

ப்ளே அஃப் எப்போது?

இந்நிலையில், லீக் சுற்றுக்கான பிளே ஆப் எங்கு நடைபெறும் என்பதை அதிகாரபூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி சுற்று போட்டியில் மே 24-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போதும் என்று கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களில் உள்ள அணிகளில் எலிமினேட்டர் போட்டியில் மே 25-ஆம் தேதி இதே கொல்கத்தா மைதானத்தில் மோதும் என்று தெரிவித்துள்ளார்.

அப்போட்டியானது அகமதாபாத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். மேலும், ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியானது மே 29-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும் இந்த இறுதிப் போட்டியில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.