பீஸ்ட் பட ரிலீஸ் தேதியில் மாறுதல்.. படக்குழு எடுத்த அதிரடி முடிவு.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது படம் குறித்த தேதிக்கு முன்பே வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் கேஜிஎப் இரண்டாம் பாகம் ஏப்ரல் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்துடன் போட்டி போட முடியாது அப்படி போட்டியிட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியாது என்று படக்குழு திட்டம் தீட்டியுள்ளது. அத்துடன் வலிமை படத்தை எப்படியாவது மிஞ்சி விடவேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.

தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கே ஜி எப் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.