தண்ணீர் குடிக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க!

பொதுவாக நம்முடைய உடல் அமைப்புகளின் இயக்கம் சீராக இருப்பதற்கு தண்ணீர் மிக அவசியம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதாவது குறைந்தபட்சம் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் வரை குடிக்க வேண்டியது கட்டாயம்.

இருப்பினும் தண்ணீர் குடிக்கும் போது ஒரு சில வழிகளை பின்பற்றுவது சிறந்தது. இல்லாவிடின் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

வேகமாக குடிக்க வேண்டாம்
தண்ணீரை வேகமாகக் குடிக்கும்போது சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் பகுதியில் உள்ள அழுக்குகள் வெளியேறாமல் அப்படியே கீழ்நோக்கிப் படிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

நின்றுகொண்டு குடிக்கக்கூடாது
தண்ணீரை நின்றுகொண்டு குடிக்க கூடாது. ஏனெனில் அது ஹார்மோன் சமநிலை ஏற்பட்டு அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல் நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் நேரடியாக தண்ணீர் அடி வயிற்றுக்குக் கீழ் போய்விடும். அதனால் தண்ணீர் குடிப்பதன் பலன் உங்களுக்குக் கிடைக்காது. தாகம் மட்டுமே தீரும்.

அதிகமாகத் தண்ணீர் குடித்தால் ஹைப்போ நெட்மீரியா என்னும் நோய் நிலைக்கு தள்ளிவிடும். கிட்டதட்ட இது ஒரு போதை நிலை போன்றது. தாகமே இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும்.

சாப்பிடும் முன் தண்ணீர் வேண்டாம்
சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உணவைக் குறைவாக எடுத்துக் கொள்வோம். இதனால் அதிக கலோரி உடலில் சேருவதைத் தவிர்க்கலாம். ஏனெனில் சாப்பிடும் முன் தண்ணீர் குடித்து வயிறை நிரப்பிக் கொண்டால் சாப்பிடும்போது உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் பெற முடியாமல் போகிறது.