ஜெயிலர் 2வில் ரஜினியுடன் நடிக்கும் பிரபல Youtube பிரபலம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு இதற்கான மாஸ் அறிவிப்பு வெளிவந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், சுராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பாலகிருஷ்ணாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Youtube-ல் படங்களுக்கு விமர்சனம் சொல்வதின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கோடாங்கி. இவர் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதாக அவரே கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் என்னை பார்த்தவுடன், ‘கோடாங்கி தான நீங்க, எனக்கு நல்ல தெரியுமே’ என கூறியதாகவும் அந்த பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.