ஸ்ரீதேவிக்கும் எனக்கும் இடையே இந்த உறவு தான்.. ஒப்புக் கொண்ட கமல்!

உலக நாயகன் என மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்த ஜுன் 5ம் தேதி வெளியான திரைப்படம் தக் லைஃப்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கமல் ஹாசன் பல நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்திருந்தாலும், திரையில் கமல் – ஸ்ரீதேவி ஜோடியின் கெமிஸ்ட்ரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், பழைய பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவி உடனான உறவு குறித்து கமல் வெளிப்படையாக பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “என்னையும், ஸ்ரீதேவியும் சேர்த்து பல கிசுகிசு செய்திகள் வந்தன. ஆனால், அதெல்லாம் உண்மையே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே அண்ணன் தங்கை போன்ற உறவு தான் இருந்தது.

ஸ்ரீவித்யா உடன் பழகியது போன்று தான் நான் ஸ்ரீதேவியுடனும் பழகினேன் என்று கூறுவார்கள். ஆனால், அது உண்மையே கிடையாது. ஸ்ரீதேவி படப்பிடிப்பில் என்னை சார் என்று தான் அழைப்பார்.

நாங்கள் இப்படித்தான் பழகினோம். ஆனால், வெளியில் நாங்கள் இருவரும் கணவன் மனைவி என பல செய்திகள் வந்தது. அது அப்படி இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை” என கமல் ஹாசன் கூறியுள்ளார்.