மஹான் படம் குறித்து விமர்சித்த கஸ்தூரி

சீயான் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த மஹான் படம் சமீபத்தில் தான் ஓடிடியில் வெளிவந்தது. அதில் விக்ரமின் மகன் துருவ் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அப்பா மகன் இடையே நடக்கும் மோதல் தான் இதன் கதையாக இருக்கும்.

இந்த படம் தோல்வி என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் விமர்சித்து இருக்கிறார். அப்பா, மகன் சேர்ந்து நடித்தால் படம் ஹிட் ஆகாது என்கிற விஷயத்தை இந்த படமும் உடைக்கவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

நிஜ அப்பா மகன் ஒன்றாக நடித்து ஹிட் ஆன தமிழ் படம் எதாவது இருந்தால் சொல்லுங்கள் என அவர் ரசிகர்களையும் கேட்டு இருக்கிறார். நெட்டிசன்களும் பல்வேறு படங்களை கமெண்டில் கூறி வருகின்றனர்.