பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் செல்ல தடை விதிப்பு!

தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரோன் வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி வரும் நிலையில், உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தற்போது பிரித்தானியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தலைமையிலான பிரான்ஸ் அரசானது அத்தியாவசியமற்ற பிரித்தானியா பயணத்தை தடை செய்ய உள்ளது.

அதாவது சுற்றுலா மற்றும் தொழில் காரணங்களுக்காக பிரித்தானியா செல்வதற்கு சனிக்கிழமை (18-12-2021) முதல் தடை செய்யப்படுகிறது. இந்த தடை உத்தரவு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், போடாதவர்கள் இருவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய மக்கள் பிரித்தானியா இருந்து பிரான்ஸுக்கு திரும்பலாம் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.