ஆற்றில் குதித்த இளம் ஜோடி!

மஹியங்கனை பாலத்தின் உச்சியில் இருந்து இளைஞனும் யுவதியும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.

எனினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸார் காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குறித்த யுவதி ரித்மாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை கூடுதல் பாடப்பிரிவில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவர் கூறினார்.

யுவதி முதலில் ஆற்றில் குதித்ததாகவும், பின்னர் அந்த இளைஞன் ஆற்றில் குதித்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த ஒருவரின் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டது.