சுவிஸில் மீண்டும் பரவலடையும் கொரோனோ

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 5,226 பேர் பாதிக்கப்பட்டதோடு 1 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 60ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 ஆயிரத்து 920 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2இலட்சத்து 37ஆயிரத்து 738 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், Covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 290 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் 6,103 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 9இலட்சத்து 10ஆயிரத்து 462 பேர் குணமடைந்துள்ளனர்.