கனடாவில் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு உதவி கோரிய குடும்பம்

கனடாவில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் வின்னிபெக் பொலிசார்.

இதுதொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 22 வயதான Hailey Bittern கடந்த 17ம் திகதி St. Vital பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

தற்போது அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், அவரது பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாக குடும்பத்தினர் மற்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மாயமான இளம்பெண் North End பகுதியில் எங்கேனும் சிக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து Jarvis முதல் Burrows வரையிலும் Main முதல் Arlington வரையிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக தனியார் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

Bittern மாயமானதில் இருந்தே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கவலையில் உள்ளனர் எனவும், கடைசியாக அவர் தங்களை தொடர்பு கொள்ளும் போது உடல் நிலை சரியில்லாமல் இருந்தார் எனவும் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Bittern தொடர்பில் மொத்த குடும்பமும் கவலை கொண்டுள்ளது எனவும், அவரது பாதுகாப்பாக உள்ளார் என தெரிந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, Bittern-ன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.