பிரித்தானிய தொழிற்ச்சாலையில் பாரிய தீ விபத்து!

பிரித்தானியாவில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நாட்டிங்ஹாமில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் உள்ள உலோக தொழிற்சாலையில், சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தீயானது சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதுமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தீயை அணைக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.

விபத்து குறித்து Nottinghamshire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு இரவு 7.20 மணிக்கு Dunkirk பகுதியில், Harrimans Lane-ல் தீவிபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது” என கூறினார்.