மாஸ்டரை மிஞ்சிய டாக்டர்.! வசூல்

பல மாதங்களுக்கு முன்பு நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் டாக்டர். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் தயாரித்து இருந்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகிய முதல் நாளிலேயே இந்த திரைப்படம் 9.84 கோடி வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டாக்டர் திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தை விட அதிக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஒன்பதாம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் $440K வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.