ஹோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நேஹா மேனன். இவருக்கு 19 வயதாகும் நிலையில், இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் இவருக்கு தமிழ் தான் அனைத்தும். கல்லூரியில் படித்து வரும் அவர் பைரவி சீரியலின் மூலமாக அறிமுகமானார்.
தொடர்ந்து, பிள்ளைநிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்ச்செல்வி, வாணி ராணி ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். வாணி ராணி சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டraaக இருந்தது. இந்த சீரியலுக்கு பின்னர் தி எல்லோவ் பெஸ்டிவல் என்ற குறும்படத்தில் அவர் நடித்திருந்தார். இதற்காக அவருக்கு விருதும் கிடைத்தது.
View this post on Instagram
சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சிலவற்றில் அவர் நடித்திருக்கிறார். லாக்டவுன் காரணமாக படிப்பிலிருந்து விலகியிருந்த அவர் தற்போது முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இனியா கதாபாத்திரம் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் ஏற்பட்டனர். இந்த நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் மஞ்சள் தாவணி அணிந்து அழகாக காட்சியளிக்கிறார்.