தமிழில் எங்கள் அண்ணா படத்தில் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை நமீதா. க்ளாமருக்கென்றே இருக்கும் நடிகைகளின் இடத்தை பிடித்து ஆரம்பத்திலேயே படுமோசமான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.
இதையடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்த நிலையில் சில காலங்களாக படவாய்ப்பில்லாமல் இருந்தார். உடல் எடையை ஏற்றி அடையாளம் தெரியாமல் இருந்த போது பிக்பாஸ் 1சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இதைதொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நமீதா, தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா.இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நமீதா.
அதில் நட்ட நடுக் காட்டில் வவ்வால் போன்று தொங்குகிறார். உடம்பில் பெல்ட்டுகள் கட்டப்பட்டு அந்தரத்தில் தொங்குகிறார் நமீதா.நமீதாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அடுத்த ரவுண்ட் அதிரடி தானா என கேட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இந்தப் படத்தின் காட்சி ஒன்றுக்காக கிணற்றில் விழுந்தார் நமீதா. அதனை உண்மை என்று நினைத்த ஷூட்டிங் பார்க்க வந்த மக்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram







