நடிகர் பவன் கல்யாண் 4வது திருமணம் செய்யப்போகிறாரா?

தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் என்றால் அது பவர் ஸ்டார் பவன் கல்யாண் தான். சினிமாவில் இவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.

ஆனால் அவரோ சினிமாவை தாண்டி அரசியலில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் என்றிருக்கிறார். தனியாக கட்சி தொடங்கி அதில் தனது பணியை செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் பவன் கல்யாணுக்கு 4வது திருமணம் என செய்திகள் உலா வருகின்றன. அது என்னவென்றால பிக்பாஸ் பிரபலம் அஷுரெட்டி என்பவர் பவன் கல்யாணுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

பவன் கல்யாணுடன் 2 மணி நேரம் பேசினேன் என்றும் அவர் தன்னுடைய கனவு எல்லாம் நடக்க வேண்டும் என்று கடிதம் எழுதி கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த நெட்டிசன்கள், பவன் கல்யாணுக்கு 4வது மனைவியாக ஆக வாய்ப்பு கிடைத்தால் ஒப்புக் கொள்வீர்களா என கேட்ட அதற்கு அவர் கண்டிப்பாக என பதில் அளித்திருக்கிறார்.