தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் பிகில் பட நடிகையா?

தல அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கும் படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில், மீண்டும் இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார்.

தல அஜித்துடன் இணைந்து இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மற்றும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருவதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிகில் படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அமிர்த்தா ஐயர், வலிமை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது வலிமை படப்பிடிப்பா என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் ரசிகர்களால் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் இது தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு என்றும் தற்போது கூறப்படுகிறது.

இதோ அந்த வீடியோ..