தளபதி விஜய் இயக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த காட்சி..!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோஎக்ஸ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நீண்ட நாட்களாக இப்படத்தின் வெளியீடு குறித்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று கொண்டாட்டம் அளிக்கும் வகையில் அப்டேட் வெளியானது.

ஆம் அதில் மாஸ்டர் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஆம் அதில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின் கடைசி நாளில் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நடிக்கும் படி கூறியுள்ளார், அதற்கு அவர் நான் நடிக்க வேண்டும் என்றால், நீங்கள் தான் அதனை இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து ஒரு காட்சியை லோகேஷ் நடிக்க அதற்கு தளபதி விஜய் ஆக்ஷன், கட் என ஒரு காட்சியை இயக்கியுள்ளாராம்.

மேலும் மாஸ்டர் திரைப்படம் 50% விஜய் படமாகவும் 50% லோகேஷ் கனகராஜின் படமாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.