விஜய்யுடன் மோதும் சிம்பு, வெளியானது ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதி, போஸ்டருடன் இதோ…

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஈஸ்வரன், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்புவின் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதால் அவரது ரசிகர்கள் அனைவரும் திரையரங்கிற்கு படையெடுக்க உள்ளனர்.

இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கல் 14 ஆம் தேதி அன்று திரைக்கு வரவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் U சான்றிதழ் பெற்றுள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் அந்த போஸ்ட்டரை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போஸ்டர்.