பிக்பாஸ் வீட்டில் கடைசியாக மனிதன்-ரோபோ டாஸ்க் நடந்தது. இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்கள் மனிதன், ரோபோ என இரண்டு டாஸ்க்கையும் செய்தார்கள்.
இதில் ஆரம்பத்தில் இருந்து சண்டை, அழுகை என இருந்தது. டாஸ்க் முடிந்த நிலையில் இதில் சரியாக செய்யாதவர்களின் பெயர்களை பிக்பாஸ் கூற சொல்லியிருக்கார் போல் தெரிகிறது.
போட்டியாளர்கள் இந்த டாஸ்கில் இவர் செய்தது பிடிக்கவில்லை, அவர் செய்தது சரியில்லை என போட்டியாளர்கள் கூறுகிறார்கள். அதில் அதிகமாக அனிதா மற்றும் ஆரி சிக்குகிறார்கள்.
காலையில் வந்த முதல் புரொமோவில் இதுதான் உள்ளது.







