பிக்பாஸில் அடுத்து நுழையப்போவது இந்த நடிகையா?

பிக்பாஸ் 4வது சீசன் 60வது நாட்களை கடந்து நிறைய சண்டைகளோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை வீட்டில் இருந்து ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், சுசித்ரா, சம்யுக்தா கடைசியாக சனம் ஷெட்டி என வெளியேறியுள்ளார்கள்.

அடுத்ததாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி மகேஸ்வரி, நடிகர் அசீம் என சிலர் உள்ளே போக போகிறார்கள் என செய்திகள் நிறைய வந்தன.

ஆனால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு டுவிஸ்ட் வைத்திருப்பதாக தெரிகிறது. அதாவது வீட்டைவிட்டு வெளியேறிய சனம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என கூறப்படுகிறது.

கடந்த சீசனில் கூட வனிதா வெளியேறி பின் வீட்டிற்குள் சென்றது நாம் அனைவரும் அறிந்தது தான்.