கணவருடன் கடலில் நீச்சல் அடிக்கும் நடிகை காஜல் அகர்வால்..!!

நடிகை காஜல் அகர்வால், புது கல்யாண ஜோடியாக வலம் வருபவர்.

எப்போது திருமணம் என்று கேட்டவர்களுக்கு திருமண தேதியோடு மாப்பிள்ளை பற்றி கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

கடந்த அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடந்தது, பின் புதிய வீட்டிற்கான பூஜை நடத்தினார். அதோடு கணவருடன் ஹனிமூனிற்கு கிளம்பினார்.

மாலத்தீவில் இருக்கும் காஜல் கடந்த சில நாட்களாக அங்கு எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

தற்போதும் அவர் கடலில் நீச்சல் உடையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களல் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.